என்னை நீ லவ் பண்ணியே ஆகணும்.. இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2025, 2:44 pm

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் மோடமாரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மூன்று மாதங்களாக சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் நகரில் உள்ள தனது தாய் மாமா வீட்டில் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி… திமுக பிரமுகரை தட்டித் தூக்கிய போலீஸ்..!!

மேலும் அந்த பெண் கோதாடா சாலையில் உள்ள தீபன் செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இந்நிலையில் நேற்று மாலை அந்த இளம் பெண்ணிற்கு முன்னதாக பழக்கமான அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் பிரமோத் குமார் என்ற இளைஞர் அந்த பெண் பணி புரியும் இடத்திற்கு வந்தார்.

அவரிடன் பேச வேண்டும் எனவே வெளியே வரும்படி கூறினார். இதனால் அந்த பெண்ணும் அலுவலகத்தின் வெளியே தனது தோழியுடன் வந்தார். அப்போது காதலிக்க வேண்டும் என்றார்.

Love Torture

ஆனால் அதனை ஏற்க மறுத்ததால் தன்னை ஏன் காதலிக்கவில்லை என்பது குறித்து அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் ஏற்கனவே பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீதும் அந்த பெண் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்ள முயன்றார்.

Young man Tried to ser fire on Girl Friend

உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை தாக்கி தீப்பெட்டியை பிடிங்கி கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹுசூர்நகர் எஸ்.ஐ ஜி. முத்தையா வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, ​​அந்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  • Actor Who Refuse to Act with Actress Aishwarya Rai Bachchan ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அடடே சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ணிட்டாரே!