கையெழுத்து போடுவது FASHION ஆகிடுச்சு.. டிடிஎஃப் வாசனை காண திரண்ட இளைஞர்கள்.. காவல்நிலையம் முன் அலப்பறை!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 5:03 pm

விதிகளை மீறி வாகனம் இயக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த யுடிவர் வாசன் ஒன்பதாவது நாளாக மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்

சென்ற மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் வழியில் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது

காரில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது கடந்த 28ம் தேதி வழக்கு பதிவு செய்து சென்னையில் அவரை கைது செய்து மதுரை கலைத்து வந்து முப்பதாம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தினர்

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டிடிஎப் வாசன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் புதிய படம் ஒன்றில் நான்காம் தேதி நடிக்க உள்ளதாகவும் மேலும் அவர் வரும் காலங்களில் இது போன்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட மாட்டார் என்றும் வாதிட்ட நிலையில் நீதிபதியிடம் வாசன் தரப்பில் மன்னிப்பு கோரியதால், அவருக்கு நிபந்தனை ஜாமின் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து 10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வழக்கறிஞர்களுடன் வந்து கையெழுத்திட்டு வரும் வாசன் ஒன்பதாவது நாளான இன்று தனது நண்பருடன் வந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றார்.

மேலும் படிக்க: நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை… குழு அத்து விசாரணை : தேசிய தேர்வு முகமை விளக்கம்!

வழக்கம் போல வாசனை காண வந்த 2k கிட்ஸ்கள் காவல் நிலையம் அருகே இருக்கக்கூடிய பகுதியில் நின்றவர் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் சென்றனர்

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!