என் மகள் தைரியசாலி : தபால் நிலையத்தில் பணிபுரிந்த இளம்பெண் அலுவலர் தற்கொலை? சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 4:54 pm

உளுந்தூர்பேட்டையில் கிராம அஞ்சலக தபால் பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பயித்தந்துறை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் அஞ்சு (வயது 23). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தில் கிராம அஞ்சலக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் உளுந்தூர்பேட்டையில் கணேசனார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி அங்கிருந்து தினந்தோறும் பாலைக் கொல்லைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தங்கி இருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காதால் , கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி அஞ்சு சடலமாக தொங்கினார்.

உடன் அங்கிருந்து சடலத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெற்றோர் தனது மகள் அஞ்சு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும் சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்ததை எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 484

    0

    0