பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய இளம் ரவுடிகளுக்கு கால் முறிவு… போலீஸார் போட்ட மாவுக்கட்டு ; குவியும் பாராட்டு…!!

Author: Babu Lakshmanan
11 December 2023, 9:54 pm

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கத்தியை காட்டி இனிப்பக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டி, ‘கொலை செய்து விடுவேன், காவல் நிலையத்திற்கு சென்றாலும் விடமாட்டேன், வழக்கு கொடுத்தால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை,’ என்று மிரட்டி பணம் பறித்து சென்றனர்.

அப்போது அருகில் இருந்த ஒரு நபர் ஓட்டம் எடுத்த நிலையில் மற்றொருவர் கேள்வி கேட்டபோது கத்தியை தூக்கிக்கொண்டு அவரையும் வெட்டப் பாய்ந்த கும்பலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகள் வைரலான நிலையில், மப்பேடு போலீசார் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரையும் வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு பிடிக்க போலீசார் முயன்றுள்ளனர். அப்போது, தப்பிக்க முயன்ற அவர்கள் தடுமாறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் கட்டு போட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!