‘ஸ்டேஷன்லயே என் புடவைய பிடுச்சு இழுத்து’… காவல்நிலைய ஆய்வாளரின் செக்ஸ் சேட்டை… இளம்பெண் பரபரப்பு புகார்…!!!
Author: Babu Lakshmanan5 June 2023, 4:54 pm
திருச்சியில் காவல் நிலைய ஆய்வாளர் மீது இளம் பெண் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 27 வயது இளம் பெண் திருச்சி பாலக்கரை பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அம்மனுவில், புகார் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்ற போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தனது கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தியும் மனு அளித்துள்ளார்.