‘என் பொண்ண கொன்னுட்டாங்க’… குழந்தைக்காக ஆபரேசன் செய்து கொண்ட இளம்பெண் உயிரிழப்பு ; உறவினர்கள் போராட்டம்…!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 4:09 pm

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம் பெண் தவறான சிகிச்சையில் உயிரிழந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கெடார் அடுத்த துறவி தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் ரெமிஜோஸ். இவர் தனியார் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஜெனிஃபர் (28), இவருக்கு குழந்தை இல்லாததால் விழுப்புரம் மாம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் (சுமதி மருத்துவமனையில்) கடந்த இரண்டு மாதமாக சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பப்பை குழாயில் அடைப்பு இருப்பதாகவும், அதனை ஆபரேஷன் மூலம் அகற்றி விட்டால் குழந்தை பிறக்கும் எனவும் கூறி, நேற்று காலை ஜெனிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பிறகு நேற்று மாலையில் இருந்து தற்போது வரை சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் ஏதும் இல்லை.

இந்நிலையில் அவரது உறவினர்கள் ஜெனிபர் இறந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் அழுது புலம்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து ஜெனிஃபர் கணவர் மற்றும் அவரது உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், ஜெனிஃபர் உறவினர் கூறுகையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தவறான அறுவை சிகிச்சை செய்ததாகவும் அதனால்தான் ஜெனிபர் உயிர்ழந்ததாகவும் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இறந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 837

    0

    0