அடுத்த வாரம் திருமணம்… தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு.. ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2025, 12:21 pm

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் கிருஷ்ணவேணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதையடுத்து ஒரகடத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் நிவேதாவும் அவரது சகோதரர் சந்திரபாபுவும் (25) வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்து இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இதையும் படியுங்க: அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு நிவேதாவுக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக நிவேதா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்ற நிவேதா அடுக்குமாடி குடியிருப்பின் மேல் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிவேதாவின் சகோதரர் சந்திரபாபு, திருமணம் காரணமாக கணவர் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும் சமையல் தெரியாது, வீட்டு வேலை செய்ய தெரியாது போன்ற காரணத்தினால் தனது அக்கா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் மனநல மருத்துவரிடம் நிவேதா சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Young Woman Falling from 13th Floor and dead

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அம்பத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அம்பத்தூரில் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Lenin Bharathi about Bala's Vanangaan movie ’ஆணாதிக்க ஆழ்மன வக்கிரம்’.. பாலாவை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்!
  • Leave a Reply