கொடைக்கானலில் இளைஞருடன் ரூம் எடுத்த அக்கா.. தம்பிக்குச் சென்ற போன்கால்.. அடுத்து நடந்த திடுக் சம்பவம்!

Author: Hariharasudhan
9 December 2024, 11:57 am

கொடைக்கானலில் இளைஞருடன் லாட்ஜில் தங்கி இருந்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நிலையில், கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர், இளம்பெண் ஒருவருடன் சுற்றுலா வந்து உள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு கொடைக்கானல் எம்.எம்.தெருவில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

ஆனால், காலை அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் கொடைக்கானல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

Woman body found in Kodaikanal Lodge

அப்போது அறையில் இளம்பெண் தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். ஆனால், அவருடன் வந்த இளைஞரைக் காணவில்லை. இதனையடுத்து, இளம்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உயிரிழந்து கிடந்த பெண் மதுரை மாவட்டம், மேல கள்ளந்திரியைச் சேர்ந்த பாலுச்சாமி மனைவி மகாலட்சுமி (28) என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ’எங்களுக்கு அஜிதா அக்கா தான் வேணும்..’ தவெகவில் கோஷ்டி மோதல்.. நிர்வாகியின் பதில் என்ன?

இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மகாலட்சுமி நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்ற இளைஞர் உடன் பைக்கில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் அவர்கள் இரவு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

Woman body found in Kodaikanal Lodge room

அப்போது மகாலட்சுமி, தனது தம்பிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவருடன் வந்த சசிக்குமார், தனது பைக்கை விடுதியிலேயே விட்டுவிட்டு தப்பி உள்ளார்.

இதனிடையே மகாலட்சுமி உடன் சசிக்குமார் எதற்காக வந்தார், மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 The Rule day 11 collection கைதுலாம் சும்மா.. அசால்ட்டு காட்டும் அல்லு அர்ஜுன்!
  • Views: - 159

    0

    0

    Leave a Reply