சிறுவர்களை வைத்து இளம்பெண் செய்த காரியம்.. ஆந்திராவை அலறவிட்ட சம்பவம்
Author: Hariharasudhan19 December 2024, 12:49 pm
ஆந்திராவில் பணம் மற்றும் அரசு வேலைக்காக சொந்த சகோதரர்களைக் கொன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்நாடு: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் போலராஜு. இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா என்ற மகன்களும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர்.
இதனிடையே, போலராஜு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரியில் உயிரிழந்தார். இவர் பணியின் போதே உயிரிழந்ததால், அவரது குடும்பத்திற்கு 70 லட்சம் ரூபாய் பணம் அரசு சார்பில் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இவருக்குச் சொந்தமாக வீடும் உள்ளது.
இந்த நிலையில், வீடு மற்றும் 70 லட்சம் பணம், அரசு வேலை ஆகியவற்றைப் பெறுவதில் மூன்று பிள்ளைகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் மூத்த மகன் கோபி, கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இருப்பினும், அவர் தந்தையின் அரசுப் பணி மற்றும் அவரது பணம் தனக்கே வர வேண்டும் எனக் கூறி உள்ளார்.
கிருஷ்ணவேணியும், அவரது தம்பி ராமகிருஷ்ணாவும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்ததால், அவர்களும் தந்தையின் வேலைக்கு போட்டி போட்டு உள்ளனர். மேலும் மூவரும் பணம் பெறுவதில் உறுதியாக இருந்து உள்ளனர். இந்த நிலையில், கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கிருஷ்ணவேணியைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, தனது அண்ணன் தம்பி இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தனக்கு தெரியாது என்று, கூறியுள்ளார். ஆனால், போலீஸ் அண்ணன் கடைசியாக பேசியது கிருஷ்ணவேணியிடம் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
இதையும் படிங்க: கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!
இதனிடையே, கிருஷ்ணவேணியிடம் தன்னையா என்ற இளைஞர் அடிக்கடி பேசி வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் கிருஷ்ணவேணியின் காதலன் என்றும், தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறி உள்ளார்.
இதனையடுத்து, மீண்டும் கிருஷ்ணவேணியிடம் விசாரித்த போது, பணத்திற்காக நவம்பர் 26ஆம் தேதி தனது தம்பியையும், டிசம்பர் 10ஆம் தேதி தனது அண்ணனையும் கொன்றதாக கூறியிருக்கிறார். மேலும், காதலனுடன் இணைந்து இந்த சதியை கிருஷ்ணவேனி நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்காக, தனது இன்ஸ்டாகிராமில் பழகும் 17 வயது சிறுவர்கள் 4 பேரை வைத்து, சொந்த அண்ணன் தம்பிகளைக் கொன்று, உடல்களை கால்வாயில் வீசியுள்ளனர். இதனையடுத்து, உடல்களைக் கைப்பற்றிய போலீசார், கிருஷ்ணவேனி மற்றும் அவரது காதலரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.