சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம் பெண் பலி : 2 அறைகள் தரைமட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 5:45 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள இந்தியன் நேஷனல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வெடி விபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டம் ஆகியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா (வயது 24) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தியன் நேஷனல் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…