பீட்ரூட், சர்க்கரை கரைசலால் பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்த இளம்பெண்… ப்ப்பா…. இப்படி ஒரு படைப்பா..? என குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
1 October 2022, 9:00 am

மதுரை : பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை கரைசலில் இளம்பெண் வரைந்த பொன்னியின் செல்வன் கதாபாத்திர ஓவியங்கள் ரசிகர்களை வியக்கவைத்தது.

மதுரை அனுப்பானடியை சேர்ந்த கிருத்திகா என்ற இளம்பெண் பேஷன் டெக்னாலஜி படித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே காபி ஓவியம் உள்ளிட்ட வித்தியாசமான ஓவியங்களை வரைந்து பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி இன்று பல திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் பலவிதமாக கொண்டாடி வருகிறார்கள்.

பீட்ரூட், சர்க்கரை கரைசலால் பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்த இளம்பெண்... ப்ப்பா.... இப்படி ஒரு படைப்பா..? என குவியும் பாராட்டு..!!

அந்த வகையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக இந்த மாறுபட்ட ஓவியத்தை வரைந்து உருவாக்கியுள்ளார். மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸில் ஓவியத்தைக் காட்சிப்படுத்தியிருந்தியிருக்கிறார்.

இது தொடர்பாக கிருத்திகா கூறியதாவது :- வித்தியாசமான முறையில் ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளது. அதனால் தான் வித்தியாசமான முறையில் பலவித ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தி வருகிறேன். இந்த நிலையில்தான் பொன்னியின் செல்வன் படம் குறித்து எனக்குள்ளும் ஒரு தாக்கத்தை உருவாகியதால் இணையம் மூலம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன்.

பீட்ரூட், சர்க்கரை கரைசலால் பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்த இளம்பெண்... ப்ப்பா.... இப்படி ஒரு படைப்பா..? என குவியும் பாராட்டு..!!

திரைப்படம் வரும்போது எனக்குத் தெரிந்த கலையால் எதாவது செய்யணும்னு முடிவு செய்து திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை புது முயற்சியில வரைந்துள்ளேன். சோழப் பேரரசு காலத்துல விவசாயம் செழிப்பா இருந்ததா படிச்சிருக்கேன். அதனால இயற்கை முறையிலான பீட் ரூட் சாறு மற்றும் சர்க்கரை பாகுவையும் கலந்து பயன்படுத்தினேன்.

பீட்ரூட், சர்க்கரை கரைசலால் பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்த இளம்பெண்... ப்ப்பா.... இப்படி ஒரு படைப்பா..? என குவியும் பாராட்டு..!!

கைத்தறி கதர் துணியை காபித் தண்ணியில ஊற வச்சு அதுல வரைஞ்சேன். இயற்கை சாறு எடுத்து வரையுறது கடினமாக இருந்தாலும், 3 நாளில் வரைந்துள்ளேன். மன்னர்கள் காலத்தில் ஓலைகள், கைத்தறித் துணிகள் மூலம்தான் செய்திகள் அனுப்புவார்கள். இதுபோன்று இந்த ஓவியங்களை வரைந்தேன். இப்ப தியேட்டருக்கு படம் பார்க்க வந்த பலரும் பாராட்டினார்கள், என்றார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!