திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்… திருமணமானதை மறைத்து சில்மிஷம்.. நடிகர் விஜய் அலுவலக நிர்வாகி மீது பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 8:45 am

சென்னை ; திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் மீது இளம்பெண் போலீஸில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது :- சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார்.

தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்.

திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பற்றி கேட்ட போது என்னை மிரட்டினார். எனக்கு திருமண ஆசை காட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை படம் எடுத்தும் வைத்துள்ளார். ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியுள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, தான் எந்தப் பெண்ணும் பாலியல் தொந்தரவு தரவில்லை என்றும், தன் மீது புகார் அளித்த பெண் தான் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறிய ராஜேஷ், இது தொடர்பாக பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!