நில மோசடி வழக்கு: அமைச்சரோடு கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சாலையில் நடந்த அதிர்ச்சி: காவல்துறை விசாரணை…!!
Author: Sudha17 August 2024, 1:26 pm
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து பிரவீன் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

தற்போது, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். வழக்கம் போல கையெழுத்திட்டு விட்டு புறப்பட்ட பிரவீன், ரெட்டிப்பாளையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அவரை மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், பிரவீன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. காயமடைந்த பிரவீன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.