போதைக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் மாயமான விவகாரம் : வெளிச்சத்திற்கு வந்த போதைக் காளான் விற்பனை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 9:43 pm

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கேரளா வாலிபர்கள் மூன்று நாட்கள் போதை காளான் தேடி வனப்பகுதிக்குள் சிக்கிய விவகாரம் எதிரொலியாக போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த பூண்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் கைது…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

இதே போன்று கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு ஐந்து இளைஞர்கள் வருகை புரிந்தனர் அப்போது பூண்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அறை எடுத்த அவர்கள் போதை காளானைத் தேடி வனப்பகுதிக்கு சென்று இரண்டு குழுக்களாக தேடி வந்துள்ளனர் .

மூன்று பேர் ஒரு குழுவாகவும் இரண்டு பேர் ஒரு குழுவாகவும் சென்று உள்ளனர் .அப்போது திரும்பி வருவதற்கான வழி தெரியாமல் அடர்ந்த வனப் பகுதிக்குள் உணவு, தண்ணீர் இன்றி மூன்று நாட்களாக தவித்து வந்தனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்து மூன்று நாட்களாக தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் விரக்தி அடைந்தனர்.மேலும் தீ தடுப்பு கோடுகள் போடும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் இவர்களை கண்டு நேற்று பூண்டி கிராமத்தில் கொண்டு வந்து விட்டதை அடுத்து காவல் துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர் .

மேலும் போதை காளான் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது எதிரொலி மற்றும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளானை தொடர்ந்து விற்று வந்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலையா, கோபாலகிருஷ்ணன் மற்றும் சசிகுமார் ஆகிய மூன்று பேரை கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான தனிப்படை இவர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் போதை காளான் விற்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.. கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து போதை காளான் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!