டீக்கடையில் சிகரெட் வாங்கி கஞ்சா கலந்து புகைத்த இளைஞர்கள் : தட்டிக் கேட்ட கடைக்காரர் மீது கொடூர தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 11:34 am

திருச்சி – திண்டுக்கல் சாலையில் திருச்சி மாநகருக்கு உட்பட்ட தீரன் நகரில் நாகநாதர் டீக்கடை காரைக்குடி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை டீக்கடைக்கு வந்த மூன்று வாலிபர்கள் அங்கு சிகரெட் வாங்கி உள்ளனர்.

பின்னர் கடையினுள் சிகரெட்டில் கஞ்சாவை மாற்றி புகைக்க முயன்றனர். இதற்கு கடை கேஷியர் கடையிலிருந்து வெளியே போகும்படி தெரிவித்துள்ளார். இதனால் கடை ஊழியர்களுக்கும் மூன்று வாலிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று வாலிபர்கள் இரும்பு கம்பியால் டீக்கடை ஊழியர்கள் இரண்டு பேரை கொலை வெறியுடன் தாக்ககினர். இதில் டீக்கடை கேசியர் கருணாநிதி தலையின் பலத்த காயமடைந்தார்.

உடனே அவரை மீட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டீக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய ராம்ஜி நகர் கள்ளிக்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஜெகதீசன் மற்றும் அஜித் குமார் என்ற இரு வாலிபர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடை மற்றும் உணவகத்தில் அடிக்கடி வாலிபர்கள் வருவதும் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டு கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடக்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கஞ்சா போதையில் இருந்த மூன்று வாலிபர்கள் டீக்கடை ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

  • Atlee’s Bollywood Production Updates ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
  • Views: - 673

    0

    0