கள்ளழகர் திருவிழாவில் பட்டாகத்தியுடன் புகுந்த இளைஞர்கள்.. பக்தர்கள் அதிர்ச்சி : வைரலாகும் ஷாக் VIDEO!
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர்.
இந்த நிலையில் மதுரை சித்திரைத்திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்தன்.
இந்த நிலையில் இருதரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் உயரமான பட்டாக்கத்தியை எடுத்து எதிரில் நின்ற இளைஞர்களை தாக்க முற்பட்டார்.
இதனால் இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் பக்தர்கள் கூட்டத்திற்குள் தப்பித்து ஓடிய நிலையில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்கள் இதனால் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
மேலும் படிக்க: வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்..7வது மலையில் இருந்து கீழே விழுந்த பக்தர் : காத்திருந்த அதிர்ச்சி!
அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியோடு சித்திரை திருவிழாவிற்கு வந்த இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்களை தாக்க முற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.