போதை காளானை தேடி காட்டுக்குள் சென்ற வாலிபர்கள் மாயம் : புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 6:27 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்கு ஒரு கூட்டம் வந்தாலும் போதை வஸ்துகளை ருசிப்பதற்காக பல மாநிலத்தில் இருந்து இளைஞர்கள் பலரும் கொடைக்கானலுக்கு வந்து செல்கிறார்கள்.

புத்தாண்டு வரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலிருந்து ஐந்து வாலிபர்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.

அப்போது கொடைக்கானலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இந்த வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து இரண்டாம் நாள் அருகே இருக்கக்கூடிய வனப்பகுதிக்குள் ஐந்து பேர் சென்றதாக கூறப்படுகிறது .

இந்த ஐந்து பேரும் தனித்தனியே போதை காளான் பறிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்ற அவர்கள் மூவர் ஒரு பக்கமும் மீதமுள்ள அல்தாப் மற்றும் ஆசிப் ஒரு பக்கமும் சென்றுள்ளனர்.

சில மணி நேரங்களுக்கு பிறகு மூவராக சென்ற கூட்டம் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்தடைந்தனர். அப்போது ஆசிப் மற்றும் அல்தாப் அழைத்த போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரவு வரை காத்திருந்து அவர்கள் வருவார்கள் எதிர்பார்த்தும் வராததால் மூன்றாம் தேதி அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் காவல்துறையினருக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் தகவல் கூறி உள்ளனர்.

தகவல் கூறிய பிறகு அவர்கள் இருந்த அறை மற்றும் அருகே இருந்த வனப்பகுதிக்குள் அரசு அதிகாரிகள் , கிராம மக்கள் என ஏராளமானோர் சென்று தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை என்பதால் பதற்றம் தொற்றி கொண்டது.

தீ தடுப்பு கோடுகள் போடும் பணிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் நடைபெற்று வருகிறது.. தீ தடுப்பு கோடுகள் போடக்கூடிய நபர்களின் சத்தம் கேட்டதால் அந்த சத்தத்தை வைத்து நடந்து சென்ற அல்தாப் மற்றும் ஆசிப் இந்த இரண்டு வாலிபர்கள் தீத்தடுப்பு கோடுகளை போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களை சென்றடைந்தனர்.

அப்போது வழி தவறி கடந்த மூன்று நாட்களாக காட்டுக்குள்ளேயே சுற்றி வந்ததாக கூறினர். இவர்களை காப்பாற்றிய பணியாளர்கள் பூண்டி கிராமத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் தற்போது இந்த இரண்டு கேரளா வாலிபர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

போதை காளானை தேடி இவர்கள் வனப் பகுதிக்குள் சென்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது..

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!