சனாதனத்தை தொட உங்க தாத்தானாலயே முடியல.. போடா : உதயநிதிக்கு எதிராக ஷாக் கொடுத்த கோவை பாஜக!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 4:18 pm

சனாதனத்தை தொட உங்க தாத்தானாலயே முடியல.. போடா : உதயநிதிக்கு எதிராக ஷாக் கொடுத்த கோவை பாஜக!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார்.

அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அயோத்தியை சேர்ந்த பரமாஹன்ஷ ஆச்சாரியார் என்ற சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் “சனாதனம்” என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் காந்திபுரம் பகுதியில் “சனாதனத்தை தொட உங்க தாத்தனாலயே முடியல போடா” என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வாசகம் சனாதனத்தை கலைஞர் கருணாநிதியால் கூட தொட இயலவில்லை என்பதை குறிப்பிடும் வண்ணம் உள்ளது.

இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் புகைப்படங்களும், கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பெயர் மற்றும் அவரது புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1789

    14

    21