‘உங்கள் சொந்த இல்லம்’ : காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2022, 11:40 am
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காவலர் குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பீட்டில் 253 வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைபோல சென்னை, புதுப்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.