பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் பந்தா காட்டிய ரவுடி ; கொத்தாக தூக்கிய தனிப்படை போலீசார்!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 4:43 pm

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பந்தா காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற 24 வயது வாலிபர் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்று, அந்த பாடல்களில் வருவது போன்று காட்சிகளுக்கு பட்டா கத்தியுடன் வீடியோ பதிவு செய்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த காட்சிகள் சமூகவலைதள பக்கத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர், அவருடைய செல்போன் மற்றும் பட்டாகத்தியை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!