ரௌடி ஸ்டைலில் பட்டா கத்தியால் கேக்கை வெட்டிய இளைஞர்.. – குட்டி தாதாவை தட்டி தூக்கிய போலீஸ்..!

Author: Vignesh
23 August 2024, 4:27 pm

நத்தத்தில் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம்… கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் எம்.கே.ராஜா (வயது 30) இவர் புதிய திராவிட கழக கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன் (ஆகஸ்ட்-17-ம் தேதி) பிறந்த நாள். அதனால் அவரது பிறந்தநாளை நண்பர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணி நண்பனுக்காக கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை ராஜா அவரது வீட்டின் அருகே பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.


ராஜா பட்டா கத்தியால் கேக் வெட்டியதை அவரது நண்பர்கள் ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர். இது காட்சி நத்தம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக கேக் வெட்டப்பட்டுள்ளதாகவும், ராஜாவின் இந்நடவடிக்கை பொதுமக்களை மிரட்டும் தொனியில் உள்ளதாகவும் போலீசார் ராஜாவை தேடி விரைந்தனர்.

இப்படி பட்டா கத்தியால் கேக் வெட்டினால் மற்ற இளைஞர்களிடம் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?