சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் : சமூக வலைத்தளம் மூலம் காதல் வலை வீசிய வாலிபர் கைது…!
Author: kavin kumar8 February 2022, 3:58 pm
புதுச்சேரி : புதுச்சேரியில் 17 வயது சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் சேர்ந்த தம்பதி மகள் அங்குள்ள பள்ளியில்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து சென்று விட்டார். மகளுடன் புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரில் மகளுடன் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் குடியேறிய அப்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரது 17 வயது மகள் சென்னையில் பள்ளியில் ஒன்றாக படித்த 19 வயது வாலிபருடன் சமூக வலைத்தளங்களின் மூலம் பழகி வந்தார். இது ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.
இருவரும் தங்களின் புகைப்படங்களை பரிமாறிக் கொண்டனர் வீடியோகால் மூலம் பேசி வந்தனர், கடந்த சில நாட்களாக சிறுமி சென்னை வாலிபருடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் கோபமடைந்த சென்னை வாலிபர் மாணவியுடன் பேசும் போது எடுத்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலியார்பேட்டை போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.