மூதாட்டியின் காதை அறுத்து மது குடித்த இளைஞர் கைது!

Author: Hariharasudhan
15 January 2025, 4:15 pm

மதுரையில், மது வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியைக் கொலை செய்து, காதை அறுத்து தங்கத்தோடை விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த திருவேடகம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை. மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சோனைக்கு மது வாங்கப் பணம் இல்லாமல் இருந்துள்ளது.

ஆனால், அவரால் மது அருந்தாமல் இருக்க இயலவில்லை. எனவே, மது வாங்க பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து வந்த சோனை, மூதாட்டி ஒருவரைப் பார்த்துள்ளார். திருவேடகம் கிராமத்திலேயே வசித்து வருபவர், 80 வயதான பாப்பாத்தி என்ற அந்த மூதாட்டி.

Youth killed old woman in Madurai

மேலும், மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்கத் தோடை கவனித்த சோனை, அதனை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்துள்ளார். எனவே, அவர் மூதாட்டியைக் கொலை செய்து, அவரது காதை அறுத்துள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த தோடுகளை எடுத்துச் சென்று விற்றுள்ளார்.

இதையும் படிங்க: கோவை சத்யன் திடீர் விலகல்… என்ன காரணம்? பரபரக்கும் அதிமுக!!

பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவந்தான் போலீசார், சோனையைல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Shankar about Game Changer Reviews கேம் சேஞ்சர் ஒருவேளை.. ஷங்கர் உடைத்த சீக்ரெட்.. கொதிப்பில் ரசிகர்கள்!
  • Leave a Reply