ஒரேயொரு வீடியோ கால்.. போன் போட்ட நண்பர்கள்.. சிக்கிய முக்கிய நபர்!

Author: Hariharasudhan
13 March 2025, 12:47 pm

சென்னை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோ அழைப்பை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னையின் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மாவிடந்தல் பகுதியைச் சேர்ந்த தமீம் கான் (24) என்ற இளைஞருடன் ஒரு சாட்டிங் (Chatting) செல்போன் செயலி மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.

முதலில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்திய இளைஞர், வீடியோ காலில் ஆடையைக் கழற்றி விட்டு பேசச் சொல்லியிருக்கிறார். இதனால், அந்தக் கல்லூரி மாணவியும் வீடியோ காலில் ஆடை இல்லாமல் தோன்றியவாறு பேசியிருக்கிறார். இதனை தமீம்கான் செல்போனில் Screenshot எடுத்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது அந்தரங்க புகைப்படத்தை கல்லூரி மாணவிக்கு அனுப்பியுள்ளார். மேலும், “என்னுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும். மறுத்தால் சமூக வலைத்தளங்களில் உன்னுடைய அந்தரங்கப் புகைப்படத்தை வெளியிட்டு பரப்பி விடுவேன்” எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

Chennai

இதனால் அதிர்ச்சி அடைந்து முறையிட்ட மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் தமீம் கான். இருப்பினும், இதனை ஏற்காத தமீம் கான், கல்லூரி மாணவியின் அந்தரங்கப் புகைப்படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது நண்பர்களும், கல்லூரி மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசி வந்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனி – வேல் இருமொழிக் கொள்கை இதுதான்.. தொடரும் பிடிஆர் அண்ணாமலை மோதல்!

இதனையடுத்து, அந்த மாணவி எண்ணூர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தமீம் கானை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?