விருது வாங்கச் சென்ற சிறுமி.. கேரளாவில் மீட்பு.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்!

Author: Hariharasudhan
14 November 2024, 5:13 pm

குமரியில் பள்ளி சிறுமியை அழைத்துச் சென்று கேரளாவில் பதுங்கி இருந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்பிற்காக தனது தாயின் மொபைலைப் பயன்படுத்தி வந்து உள்ளார். அதேநேரம், இன்ஸ்டாகிராம் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனையும் சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார்.

இதன் மூலம் சக மாணவிகளுடன் அம்மாணவி பேசி வந்துள்ளார். இந்த நிலையில், Instagram செயலி மூலம் குமரி மாவட்டம், அஞ்சுகம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரசாத் என்ற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் நட்பாக மாறி, பின்னர் காதலாக உருவெடுத்து உள்ளது.

இந்த காதலின் விளைவாக, இருவரும் சேர்ந்து கன்னியாகுமரியின் பல இடங்களில் வலம் வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு உள்ளனர். இந்த திட்டத்தின் படி, சிறுமியின் தாயாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய அந்நபர், சிறுமிக்கு விருது வழங்க உள்ளதாகவும், அந்த விருதை சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்று பெற உள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அச்சிறுமியின் தாயார், சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். அப்போது வந்தது சிவப்பிரசாத் என்ற இளைஞர் என்பது அந்தத் தாய்க்கு தெரியாது.

YOUTHS S

பின்னர் இரண்டு நாட்களாகியும் சிறுமி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டு உள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், எந்த வித விருது விழாவிற்கும் உங்கள் மகளை அழைத்துச் செல்லவில்லை எனவும், அப்படிப்பட்ட விழா எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: பிஸ்கட் கொடுத்து கைக்குழந்தை கடத்தல்… தாயிடம் துருவித்துருவி விசாரணை!

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் பெயரில் சிறுமியுடன் பழகி வந்த சிவப்பிரசாத் என்ற இளைஞர், சிறுமியுடன் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை எடுத்து கேரளா விரைந்த குமரி தனிப்படையினர், சிவப்பிரகாசத்தை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து சிவப்பிரசாத் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?