‘பணம் கேட்டால் தரமாட்டீயா’.. வீச்சரிவாளால் பார் ஊழியரை தாக்க முயன்ற இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ..!!
Author: Babu Lakshmanan18 November 2022, 12:10 pm
கரூர் அருகே டாஸ்மாக் பாரில் வீச்சரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், பணம் தராததால் டாஸ்மாக் ஊழியர்களை இளைஞர்கள் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
கரூரை அடுத்த ஆத்தூரில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடையும், அதை ஒட்டிய பாரும் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை அந்த பாருக்கு வந்த இளைஞர்கள் 3 பேர், பாரில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுக்கவே நீண்ட வாளை எடுத்து வந்து அதில் ஒரு இளைஞர் அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் அதனை தட்டிக் கேட்க முற்பட்ட போது, அவர்களை வாளை பின்பக்கமாக திருப்பிப் பிடித்து அதில் தாக்கியுள்ளான். இது தொடர்பான வீடியோக்கள் அங்கு பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.