விபத்தில் சிக்கி இளைஞர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம் : உடலுக்கு அரசு மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 11:21 am

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகன் கார்த்திக் ராஜா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டு இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் ராஜா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இதையும் படிங்க: பாலியல் புகார் எதிரொலி : விஜய்யின் ஆஸ்தான நண்பர் கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு!

இந்நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் உறுப்புகள், கண், இதயம் சிறுநீரகம் போன்ற ஆறு உறுப்புகள் இன்று தானம் செய்யப்பட்டது.

Hospital

அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை அரசு மரியாதை செய்தனர். பின்னர் அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!