பொன்னேரி அருகே இளைஞரின் கைகளைப் பின்புறம் கட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து தலையை வெட்டி துண்டாக்கி சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே இரவு நேரத்தில் கடைகள் அடைக்கப்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரின் கைகளை கட்டி, தலையை தனியாக துண்டித்து கொடூரக் கொலை செய்துள்ளனர். இந்த செயலை செய்த கும்பல், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி காவல்துறையினர், தலை தனியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மவுத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் (25) என்பதும், இவரை கொலை செய்தது யார்..? எதற்காக கொலை செய்தனர்..? முன் விரோதம் காரணமாக கொலை செய்தனரா..?என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ராகேஷ் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் இவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை நடந்த பகுதி இருட்டான இடம் என்பதாலும் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் இல்லாததால் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்..? எத்தனை பேர்..? என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
This website uses cookies.