பைக்கில் பறந்தபடி பட்டாசு வெடித்து இளைஞர்கள் அட்டகாசம் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2022, 5:45 pm

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் பைக்கில் பரந்தபடி பட்டாசு வெடித்துக்கொண்டே சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பு.

தீபாவளித் திருநாளன்று, விழுப்புரத்தில் உள்ள முக்கியச் சாலைகள் வழியாக, இளைஞர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் ஒருவர், தனது கையில் பட்டாசு பாக்ஸை வைத்துக்கொண்டு, வாகனத்தில் பறந்தபடி, அதில் ஒவ்வொரு பட்டாசாக வெடித்தவாறு சென்றுள்ளார்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

https://vimeo.com/764132889

அந்த இளைஞர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களா அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்களா என்பது புரியவில்லை. இருப்பினும், அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ