ஒயின்ஷாப்பில் திருடிவிட்டு குடித்து குறட்டை விட்டு தூங்கிய திருடன்.. விடிந்ததும் நடந்த ஷாக்..!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2024, 5:02 pm

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நரசிங்கி நகரில் பர்ஷா கவுட் என்பவர் கனகதுர்கா என்ற பெயரில் ஒயின் ஷாப் வைத்துள்ளார்.

Hello பிரபா ஒயின் ஷாப்பா?வடிவேலு பட பாணியில் சம்பவம்!

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை கடை வியாபாரத்தை முடித்து கொண்டு நள்ளிரவு 11.30 மணிக்கு கடையை மூடிவிட்டு உரிமையாளர் வீட்டுக்குச் சென்றார்.

அதன் பிறகு அங்கு வந்த மர்ம நபர் கடையில் மேற்கூரையில் இருந்த இரும்பு ஷீட்டை கட் செய்து ஒயின் ஷாப் உள்ளே சென்றார். பின்னர் கடையில் பணம் வைத்திருந்த கவுண்டரில் இருந்த ₹20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனக்கு பிடித்து விலை உயர்ந்த மதுபானங்களை கொண்டு வந்த பையில் வைத்து கொண்டான்.

இதையும் படியுங்க: மாணவி பாலியல் விவகாரம் குறித்து திமுக அரசுக்கு எதிராக கருத்து : காவலர் சஸ்பெண்ட்!

மேலும் சி.சி.கேமிரா ஒயர்களை சேதப்படுத்தி அதன் ஹார்ட்டிஸ்க் எடுத்து கொண்டான். வெளியே செல்ல இருந்தபோது மது பாட்டில்களைக் கண்டதும் மனதுக்குள் குடித்துவிட்டு செல்லலாம் என முடிவு செய்து குடிக்க ஆரம்பித்து சுயநினைவை இழந்து அங்கேயே தூங்கினான்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் பர்ஷா கவுட் மதுக்கடையை திறந்து பார்த்தபோது உள்ளே திருடன் படுத்திருப்பதை கண்டார். மேலும் அருகில் பணம், மது பாட்டில்கள் இருந்ததால், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

Youth Caught in wine shop after theft and drink alcohol

நரசிங்கி எஸ்.ஐ. அகமது மொகினுதீன் அங்கு வந்து திருடனை கைது செய்தார். மது போதையில் சுயநினைவை இழந்த திருடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?