25 அடி உயர மேற்கூரையில் இருந்து தலைகீழாக குதித்து இளைஞர் தற்கொலை : மதுபோதையில் விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 6:22 pm

சென்னை : அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் எறி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மதுபோதையில் இளைஞர் ஒருவர் வந்தார். திடீரென 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையில் மேல் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்

இது குறித்து தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத்துறையினர், இளைஞருடன் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் இளைஞன் உடன்படவில்லை.

இதையடுத்து மேற்கூரையில் இருந்து திடிரென தலைக்கீழாக இளைஞர் குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 616

    0

    0