வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் இளைஞர் சடலம்… காணாமல் போன தொழிலாளர்கள் எங்கே? காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 10:48 am
Velachery
Quick Share

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் இளைஞர் சடலம்… காணாமல் போன தொழிலாளர்கள் எங்கே? காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!

சென்னை வெள்ளம் மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

இந்த வெள்ளத்திற்கு இடையே வேளச்சேரியில் கட்டுமானம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேளச்சேரியில் 50 அடி ஆழத்துக்கும் அதிகமான மிகப்பெரிய பள்ளத்தில் சிக்கி இன்று சடலமாக ஒருவர் மீட்கப்பட்டார். இந்த நிலையில் அங்கே அதிகாலை கண்ட காட்சிகள் தொடர்பாக போலீசார் வட்டாரங்கள் முக்கியமான தகவல்களை வெளியிட்டு உள்ளன.,

வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள எல்.பி.ஜி கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே தனியார் நிறுவனம் சார்பில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மாபெரும் குழி ஒன்று ஏற்பட்டு உள்ளது. கடந்த திங்கள் கிழமை மழையின் போது இந்த மாபெரும் குழி எங்கே ஏற்பட்டது. திடீரென விரிசல் ஏற்பட்டு, 50 அடி ஆழத்துக்கும் அதிகமான மிகப்பெரிய பள்ளமாக மாறியது.

இதில், அருகில் இருந்த கண்டெய்னர், நிழற்குடையின் ஒருபகுதி, கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷனின் ஒரு பகுதி என அனைத்தும், பள்ளத்தில் சரிந்தது. அப்படியே கட்டுமானம் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செட்டப் கீழே விழுந்தது. புயலை முன்னிட்டு கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதை மீறி அங்கே கட்டுமான பணி அங்கே நடந்து உள்ளன. அங்கே பணி நடைபெற்ற இடத்தின் அருகில், கண்டெய்னரில் வசித்து வந்த கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் அந்தப் பள்ளத்தில் சிக்கினர். அதில், 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வருகிறது.

நேற்று அங்கிருந்து கெட்ட வாடை அடிக்க தொடங்கியது. அப்போதே இரண்டு பேரும் பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் தமிழக தீயணைப்பு வீரர்களும் இணைந்து அந்த இருவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராட்சத பம்ப்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றியும், இன்னும் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது. இதனால், மழைநீரை அகற்றும் முயற்சி பலன் தரவில்லை. மீட்பு பனியின் ஒரு கட்டமாக இன்று அதிகாலை ஒரு சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீசார் தரப்பு.. ஒரு உடலை மீட்டு உள்ளோம். இன்று பிற்பகலுக்குள் இன்னொரு உடலை மீட்போம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் .. அந்த உடலின் நிலை மிக மோசமாக அழுகி காணப்படுகிறது. பெரும்பாலும் அங்கே சிக்கிய இரண்டு பேருமே திங்கள் கிழமையே பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளது. அழுகி இருக்கும் உடலை பார்த்தால் இறந்து 3-4 நாட்கள் ஆனது போல இருக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்ட முதல் நாளே அந்த இரண்டு பேருமே பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 337

    0

    0