டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.. விநாயகர் சிலையை கரைத்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 2:12 pm

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் விநாயகர் சிலை கரைத்துவிட்டு திரும்பி வந்த போது டிராக்டரில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பழவேற்காடு கடலில் கரைக்கப்பட்டன. அவுரிவாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதி இளைஞர்கள் டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்று பழவேற்காடு கடலில் கரைத்து விட்டு திரும்பினர்.

பாக்கம் கிராமத்தின் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…