தமிழகம்

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவர் விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் பரணி (19). இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும், இவர் திண்டிவனம் பகுதியில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.

அதேநேரம், பரணி விழுப்புரம் – மாம்பழப்பட்டு சாலை ஸ்டாலின் நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் சில நாட்களாக தங்கி, மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பரணி நேற்று (மார்ச் 28) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள தண்டவாளத்தின் அருகே அமர்ந்து கொண்டு ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சரியாக காலை 8 .15 மணிக்கு பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்துள்ளது. ஒருவர் அமர்ந்து கொண்டிருப்பதை ரயில் ஓட்டுநர் கவனித்துள்ளார்.

இதனால் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளார். ஆனால், காதில் ஹெட்போன் மாட்டி இருந்ததால், பரணி ரயில் வருவதை உணரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பரணி ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து செல்வம், ரயில்வே பாதுகாப்பு துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வீரபாலன், விக்னேஷ் டேவிட் ஆகியோர் வந்து, உடலைக் கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 19 மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன? படியும் ரத்தக்கறை.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!

மேலும், இது தொடர்பாக விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொதுமக்கள் ரயில் பாதைகளில் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், செல்போன் பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.