காய்ச்சலுக்கு மெடிக்கல் கடையில் ஊசி போட்ட இளைஞர் திடீர் மரணம்.. விசாரணையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2024, 3:59 pm

சென்னை அடுத்த சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் சந்தோஷ் வயது 19. கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 22ஆம் தேதி சந்தோஷிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது தாயார் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள மருத்துவரை பார்க்க அழைத்து சென்றுள்ளார்.

அங்கு கிளினிக் மூடப்பட்டிருந்ததால் அருகில் இருந்த ராகவேந்திரா மெடிக்கல் ஷாப் என்ற மருந்து கடையில் கேட்ட பொழுது அங்கிருந்த பெண் சந்தோஷை பரிசோதித்து விட்டு காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் 23ஆம் தேதி சந்தோசிற்க்கு உடலில் வீக்கம் ஏற்பட்டது உடனே அந்த மருந்து கடையில் சென்று கேட்ட பொழுது தைலம் தேயிங்கள் சரியாகிவிடும் என கூறியுள்ளனர்.

அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட சந்தோஷ் உடல்நிலை மோசமாகி நேற்று மாலை உயிரிழந்தார்

இதையும் படியுங்க: அப்பவே அதிமுக செய்திருந்தால்.. அண்ணா பல்கலை., சம்பவமே நடந்திருக்காது.. கைகாட்டும் கனிமொழி எம்பி!

அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பெற்றோர் தனது மகன் ஊசி போட்டதாலே இறந்ததாக சேலையூர் காவல் நிலையத்தில் இன்று மதியம் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து சந்தோஷ் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youth Died suddenly after receiving an injection at a medical shop

இதற்கிடையே சந்தோஷ் மரணம் அடைய மெடிக்கல் ஷாப் ஊசி போட்டதுதான் காரணம் எனக்கூறி அவரது நண்பர்கள் ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மருந்து கடை மூடப்பட்டது

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 38

    0

    0

    Leave a Reply