போதையில் கடலில் ஆட்டம் போட்ட நண்பர்கள்…. அலையில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் ; சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
5 October 2023, 2:23 pm

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற போது, வாலிபர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தனது நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, இரவு விடுதி எடுத்து தங்கிய அவர்கள், மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில் விடுதிக்கு பின்புறம் இருந்த கடல் பகுதிக்கு சென்று குளிக்கச் சென்றுள்ளனர். கடலில் ஆபத்து நிறைந்த மக்கள் யாரும் பயன்படுத்தாத பகுதிக்கு நால்வரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென வந்த இராட்சத அலை அனைவரையும் கடலுக்கு இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் தப்பி வந்த நிலையில், சண்முகவேல் மட்டும் அலையில் சிக்கிக் கொண்டார்.

பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சண்முகவேலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?