வாகனத்துக்கு வாட்டர் வாஷ் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி : பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 9:21 pm

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் காளமேகம் பகுதியில் யுவராஜ் என்பவர் சொந்தமான வாட்டர் வாஷ் கடை வைத்து வருகிறார்

இங்கு கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 20) என்பவர் அவரிடத்தில் வாகனத்திற்கு வாட்டர் வாஷ் செய்யும் பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் , இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே மயங்கி விழுந்தவுடன் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடுங்கையூர் ஆய்வாளர் சரவணன் ஆகாஷ்யை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்ததின் பேரில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…