இளைஞர் வெட்டிப் படுகொலை.. நடுரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : கடைகள் அடைப்பு : தூத்துக்குடியில் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 10:29 am

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் கே.டி.சி. நகரில் பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார்.

இதனால் ஆவுடை யப்பன் தனது மகன் கணேசனுடன் 24 தனியாக வசித்து வந்தார். இது தொடர்பாக ஆவுடையப்பன் மற்றும் சுடலைமணி இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு டி.எம்.பி.காலனியில் கணேசன் தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர், கணேசனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன் கீழே விழுந்ததும் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

தகவலறிந்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சத்தியராஜ்,தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்.ஐ.க்கள் சிவகுமார், சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனும தித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கணேசன் நள்ளிரவில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார் இதற்கிடையே சுடலைமணி தலைமறைவாகிவிட்டார்.

இதனால் போலீசார் அவரை சந்தேகித்து தேடி வருகின்றனர். மேலும் கணேசனை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இன்று காலை 4 இருசக்கர வாகனத்தில் வந்த கணேசன் நண்பர்கள் கணேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்களை கண்டித்து சாலையின் நடுவே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தனர்.

மேலும் திறந்திருந்த கடைகளை அடக்கச் சொல்லி கோஷமிட்டனர் இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 628

    0

    0