பறக்கும் ரயிலில் தொங்கியபடி இளைஞர்கள் அட்டகாசம் : வைரலான வீடியோவால் போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2022, 1:06 pm
சென்னை : சிந்தாதரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் பறக்கும் ரயிலில் இளைஞர்கள் வெளியே தொங்கி கொண்டு அபாயகரமான சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே, பேருந்துகள் மற்றும் ரயில்களில் இளைஞர்கள் சிலர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு அட்டகாசம் செய்யும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வந்தது.
அதே போல பள்ளி மாணவர்கள் பேருந்துகள், ரயில்களில் தொங்கியபடி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருவதும் தொடர்நது வருகிறது.
இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலில், இளைஞர்கள் சில ரயிலின் மேல் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். வெளியில் தொங்கியபடியும், ரயில் மீது ஏறியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.