ஹோட்டல் வேலைக்குச் சென்ற நெல்லை இளைஞர்.. விரைந்த தனிப்படை.. என்ன நடந்தது?
Author: Hariharasudhan18 January 2025, 6:55 pm
கோவையில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர்: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானம் (24) என்பவர், கோவையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் கூலித் தொழிலாளியாக அங்கேயே தங்கி வேலைப் பார்த்து வந்தார். அப்போது, சந்தானத்திற்கும், அங்குள்ள அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு இஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நன்றாக காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். எனவே, பெற்றோர் சிறுமி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: அன்று அது நடந்ததால் தான்.. திடீரென கன்னடத்தில் வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!
இந்த விசாரணையில், சந்தானம் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நெல்லை விரைந்து சென்ற போலீசார், பள்ளி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், சந்தானத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.