திருச்சி அருகே இளைஞரை கடத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடச் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணத்தை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது இளைஞர். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இளைஞர் தனியார் பேருந்தில் மணப்பாறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் இருக்கையில் அமர்ந்து பயணித்த வண்டிப்பேட்டை தெரு எஜமான் மகன் அறிவழகன் (27) தனது நண்பர்களுக்கு கைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இதைக்கண்டு பயந்த அந்த இளைஞர் மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
அறிவழகனின் அழைப்பைத் தொடர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளர். பின், அந்த இளைஞரை மறைவான பகுதிக்கு கடத்தி சென்று அங்கு, சேதுரத்தினபுரம் காஜாமைதீன் மகன் முகமது ரியாஸ் (24) என்பவனிடம் ஓரினச்சேர்க்கை செய்ய வற்புறுத்தியுள்ளார்.
அதை மஸ்தான் தெரு தங்கராஜ் மகன் அருண்குமார் (22) வீடியோ எடுத்துள்ளான். பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று இளைஞரை மிரட்டி அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை கூகுள்பே மூலம் லட்சுமிநாராயண நகர் மோகன் சிங் மகன் லியோ பிளாய்டு(25) வங்கி கணக்கில் பெற்றுள்ளனர். பின்னர் பணத்தை 6 பேரும் பங்கிட்டு கொண்டதாக தெரிகிறது.
இரவில் சுமார் 6 மணி நேர துன்புறுத்தலுக்கு பின் விடுவிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார் அறிவழகன், முகமது ரியாஸ், அருண்குமார், லியோ பிளாய்டு மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த மணப்பாறைப்பட்டி சாலை முருகன் மகன் மயில்(எ) செந்தில்குமார்(25), நேருஜி நகர் மோகன் மகன் யுவராஜ்(26) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.