கடலில் வீசப்பட்ட இளைஞர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் சகோதரர் வெறிச்செயல்!
Author: Hariharasudhan10 December 2024, 3:55 pm
விழுப்புரத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரைக் கொன்று கடலில் வீசிய சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது நபருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
பின்னர், நவம்பர் 8ஆம் தேதி, புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயங்கள் உடன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், இது குறித்து அவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த நபர் வசித்து வந்த அதே பகுதியில் இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து உள்ளார்.
இது தொடர்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த நபருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சகோதரர் மது விருந்து வைப்பதாகக் கூறி அந்நபரை அழைத்துச் சென்று உள்ளார்.
இதையும் படிங்க: 2 நாட்கள் ஆண் நண்பருடன் உல்லாசம்.. திடீரென லாட்ஜில் சரிந்த இளம்பெண்.. சென்னையில் பரபரப்பு!
பின்னர், அங்கு சென்ற பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி கொலை செய்துவிட்டு, கடலில் வீசிவிட்டுச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.