பாய்ந்து வந்த காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு : ஜல்லிக்கட்டு களத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்…
Author: kavin kumar11 February 2022, 5:52 pm
புதுக்கோட்டை : திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் இதில் கலந்து கொண்டனர். இதில் கீழப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் பாண்டி முருகன் என்ற இளைஞரை போட்டியல் கலந்து கொண்ட காளை முட்டியதில் அவர் உயிரிழந்தார்.மேலும் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது