புது காதலி + பழைய காதலியுடன் 4 வருட காதலியைக் கொன்ற காதலன்.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
6 March 2025, 4:27 pm

ஏற்காடு மலைப்பாதையில், புது காதலி மற்றும் கல்லூரி காதலியுடன் சேர்ந்து 2வது காதலியைக் கொன்ற இளைஞர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்தப் பெண்ணை கடந்த நாட்களாக நாட்களாக காணவில்லை என்றும், அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் ஆனதால், விடுதி வார்டன், பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன்படி விசாரணை மேற்கொண்டதில், அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு, திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்தது பதிவாகி இருந்துள்ளது. அதோடு, அப்பெண்ணின் செல்போன் எண் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இளம்பெண்ணுடன் பேசிய திருச்சி இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காணாமல் போன இளம்பெண், திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான லோகநாயகி என்ற அல்பியா (31).

Yercaud Murders

இவருக்கும், பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வரும் அப்துல் ஹபீஸ் (22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இது காதலாக மாறி, கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

முக்கியமாக, காதலுக்காக லோகநாயகி, மதம் மாறி அல்பியா என பெயர் வைத்துக் கொண்டார். இதனையடுத்து, அல்பியா கடந்த 2023ஆம் ஆண்டு சேலம் வந்து, தனியார் விடுதியில் தங்கியபடி, ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

இதனிடையே காதலன் அப்துல் ஹபீஸ், அவ்வப்போது விடுமுறை நாட்களில் சேலம் வந்து, அல்பியாவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அப்துல் ஹபீஸ், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் காவியா சுல்தானா (22) என்பவருடன் பழகியுள்ளார்.

இது ஒருகட்டத்தில் அல்பியாவுக்கு தெரியவர, காதலனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அப்துல் ஹபீஸ், தனது புது காதலி காவியா சுல்தானாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதன்படி, அல்பியாவைக் கொலை செய்ய புது காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக தனது முதல் காதலியான மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவிடம் (22) அப்துல் பேசியுள்ளார். ஆனால் மோனிஷாவிடம், தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்துக் கொலை செய்து விட்டார்.

எனவே, அல்பியாவை பழி வாங்க வேண்டும். அவரைக் கொல்ல நீ உதவி செய்ய வேண்டும் என ஒரு கதையைக் கூறி மோனிஷாவை இழுத்துள்ளார். இதன்படி, கடந்த மார்ச் 1ஆம் தேதி அப்துல் ஹபீஸ், மோனிஷா மற்றும் காவியா சுல்தானா ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் சேலத்துக்கு வந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து வாடகைக்கு ஓட்டுநர் இல்லாமல் காரை மட்டும் எடுத்துக்கொண்டு அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று, தனது காதலிகள் 2 பேரையும் தோழிகள் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர், அல்பியாவை காரில் அழைத்துக் கொண்டு ஏற்காடு சென்றுள்ளார்.

இதனையடுத்து, மலைப் பாதையில் 60 அடி பாலம் அருகே வந்தவுடன், காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர். அப்போது, மோனிஷா அல்பியா உடலில் விஷ ஊசியை இருமுறை போட்டுள்ளார். இதனால் அல்பியா உடனடியாக இறந்துள்ளார்.

இதையும் படிங்க: பவுலர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்க வேண்டும்..ஐசிசி-க்கு முகமது ஷமி கோரிக்கை.!

பின்னர், அல்பியாவின் உடலை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு மூவரும் காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அப்துல் குறிப்பிட்ட இடத்தில் இருந்த அல்பியாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து, இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா மற்றும் மோனிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

  • Aishwarya Rajinikanth upcoming project ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!
  • Leave a Reply