நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர்.. கோவையில் சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2025, 12:49 pm

கோவையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அவர் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.

அப்பொழுது அந்த குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறு அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி ஸ்கூட்டரில் வந்த வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றதாக தெரிகிறது.

இதையும் படியுங்க: ராக்கெட் வட்டி வசூலிக்கும் கந்து வட்டி கஜேந்திரன்.. மிரட்டி பல கோடி சொத்துகளை பறித்த திமுக நிர்வாகி!

உடனே அந்த வாலிபர் மோதலை மறந்து விட்டு அந்த மாணவி தன்னிடம் சிரித்து தான் பேசுகிறாள் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றது. மாணவியின் ஸ்கூட்டரின் முன் சென்று தடுத்து நிறுத்தினார்.

பின்னர் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மாணவியின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி அலறினார். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து அந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Kiss Harassment

அதன் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்த கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த மாணவி சம்பவம் நடந்த போது சிரித்தபடி பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்ட அவர் பின் தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டதும் தெரிய வந்தது.

Youth kissed a college student in the middle of the road

இதை அடுத்து போலீசார் முஹம்மத் செரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!