சுடுகாட்டுக்கே கூட்டிச் சென்ற சுடுதண்ணீர்.. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2024, 5:07 pm

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (36) ஏ.சி மெக்கனிக்காக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஆறு மாதத்தில் குழந்தை உள்ளது. மனைவி செங்கல்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வரும் நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைகையை முன்னிட்டு நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக காலை பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி சுடு தண்ணீர் போட்டுள்ளார்.

இதையும் படியுங்க : பெண் போலீசிடம் அத்துமீறல்.. ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்!

பின்பு எதிர்பாரதவிதமாக தண்ணீர் சூடாகிவிட்டதா என்று தொட்டு பார்த்த போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து வெகு நேரமாக நரேஷ்குமார் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது இறந்திருப்பது தெரியவந்தது.

Youth Dead due to Electric Shock

தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக்ல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…