12ம் வகுப்பு மாணவிக்கு கத்திகுத்து.. வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.. குன்னூரில் ஷாக்!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 1:55 pm

நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி – குன்னூரில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பெட்போர்டு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் என்பவர் மாணவியை நோக்கி சென்றார்.

அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக, மாணவியை ஆசிக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதனால், காயமடைந்த மாணவி வலி தாங்க முடியாமல் துடித்தார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாணவியை கத்தியால் குத்திய ஆசிக்கை, அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 26 வயதான ஆசிக் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?