திருவள்ளூர் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் இளைஞர் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள காரனோடை பகுதியைச் சேர்ந்த சரத் பாபு (23) என்பவர் தனது மாமா ராஜ்குமார் வீட்டிற்கு சென்று விட்டு, பாட்டி மாரியம்மாள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக கொடூரமாக தலை மற்றும் முகத்தில் கொடூரமாக வெட்டி கொன்றது.
ரத்த வெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்ததை தொடர்ந்து, கொலை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல்துறையினர் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சரத் பாபு அவரது நண்பரான மோகன் கஞ்சா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள மோகன், பிரபல ரவுடி முத்து சரவணன் கூட்டாளி என்பதால், ரவுடி முத்து சரவணன் கோஷ்டிக்கும், சேதுபதி கோஷ்டிக்கும் இடையே உள்ள முன் விரோதம் காரணமாக மோகனின் நண்பரான சரத்பாபுவை கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா போதையில் முன் விரோதம் காரணமாக இவரை வேறு யாரேனும் கொலை செய்தனரா என்பது குறித்தும், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சரத்பாபு மீது மீஞ்சூரில் மண் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ள நிலையில், அவரை கொலை செய்ததற்கான காரணம் கொலையாளிகள் கைது செய்யப்பட்டால், தான் உண்மை விவரங்கள் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.