3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் உல்லாசம் : இளைஞரை கண்டித்த கணவர்.. நள்ளிரவில் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 2:31 pm

கடலூர் : விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோமங்கலம் கிராமத்தில் மர்மமான முறையில் பெரியசாமி என்பவர் மகன் பழனிவேல் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் காவல் துறைக்கு தகவல் கூறியதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பழனிவேலின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பழனிவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைக்கு தாயான பெரியசாமி மனைவி வெண்ணிலாவுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் இதனால் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் நேற்று இரவு இதுகுறித்து தகராறில் அந்த பெண்ணின் கணவர், மைத்துனர் மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து பழனிவேலை இரும்பு கம்பியால் அடித்து உதைத்ததாகவும் இரு தரப்பினரையும் பொதுமக்கள் விலக்கிவிட்டு சென்றதாகவும் அந்த பெண்ணின் கணவன் மற்றும்உறவினர்கள் பழனிவேலிடம் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பழனிவேல் இறந்து இருந்தது அவர்களின் உறவினர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையில் புகார் மனு அளித்து கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலை கைப்பற்றி விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என்பதால் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!