பிளஸ் 1 மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 4:09 pm

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நந்திகொட்கூரில் நடைபெற்ற இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றும் வேலையை மட்டுமே கவனித்து வந்த ராகவேந்திரா என்பவன் அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான்.

தன்னை காதலிக்குமாறு பலமுறை அவன் வலியுறுத்தி வற்புறுத்தி கூறியும் அந்த மாணவி அவனுடைய காதலை ஏற்காமல் மறுத்து இருக்கிறார்.

ஆவேசமடைந்த ஒரு தலை காதலன் ராகவேந்திரா அந்த மாணவி மட்டும் தனியாக இருந்த நேரத்தில் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னுடைய காதலை எடுத்துக் கூறி சம்மதிக்க வைக்க முயற்சித்து இருக்கிறான்.

அப்போது அவன் ஏற்கனவே தீட்டிய ரகசிய கொலை திட்டத்தின் படி ஒரு பாட்டிலில் பெட்ரோலையும் மறைத்து எடுத்துச் சென்ற நிலையில் அந்த மாணவி தொடர்ந்து அவனுடைய காதலை ஏற்க மறுத்தார்.

இதையும் படியுங்க: சரியான அப்பா – அம்மாவுக்கு பிறந்திருந்தால் வழக்கு போடுயா…அண்ணாமலை சவால்!

இதனால் ஆவேசமடைந்த அந்த ஒருதலை காதலன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்து விட்டான்.

இதனால் உடலில் பற்றிய தீ அந்த மாணவி மீது மளமளவென பரவி தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்து விட்டார்.

மாணவி எழுப்பிய அபய குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது நடைபெற்ற பயங்கரம் தெரிய வந்தது.

Psycho Youth Set Fire on Plus one Student

அதே நேரத்தில் ராகவேந்திரா மீதும் தீ பற்றி அவனுடைய உடைகள் எரிந்து அவனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அங்கு இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த போலீசார் ராகவேந்திராவை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • Actor Soori new film Maaman update பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
  • Views: - 104

    0

    0

    Leave a Reply